Biography of mudiyarasan
Mudiyarasan yearned to see a woman who gave herself up to the Tamil cause, like Manimekhalai, the nun who dedicated her life to Buddhism in the ancient epic.!
Cookery · Cinema · General Knowledge.முடியரசன்
வீறுகவியரசர் முடியரசன் (இயற்பெயர்: துரைராசு, அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர்.
துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்..
Mudiyarasan R. Mohan.
தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர். எனவேதான் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 'சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா?
எனத் தெரியவில்லை' என்று போற்றினார்